HTML Tutorials 22-HTML ஆவணத்தில் படங்களைச் சேர்க்க | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorials 22-HTML ஆவணத்தில் படங்களைச் சேர்க்க ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 31 டிசம்பர், 2014

HTML Tutorials 22-HTML ஆவணத்தில் படங்களைச் சேர்க்க

பல வலையகங்கள்(Websites) படங்களைக் கொண்டிருக்கின்றன. 

நம்முடைய வலைபக்கத்தில் படங்களைச் சேர்ப்பதன் மூலம் 

பார்வையாளரின் கவனத்தை ஈர்க்க முடியும். வலைப்பக்கத்தில் மூன்று 

விதமான படக்கோப்புகளைச்(Image Files) சேர்க்க முடியும்.

GIF (Graphics Interchange Format)
JPG/JPEG(Joint Photographic Experts Group)
PNG(Portable Netwrok Graphics)

மேற்கண்ட கோப்புவகையுடன் கூடிய படங்களை HTML ஆவணத்தில் 
 
சேர்ப்பதன் மூலம் உங்கள் வலைப்பக்கங்களில் படங்களை காட்ட முடியும்.
 
இதற்குப் பயன்படும் குறிஒட்டு(TAG) <IMG> குறிஒட்டு எனப்படும்.


இந்த <IMG> குறிஒட்டு எப்பொழுதும் SRC என்னும் பண்புடன் சேர்த்தே 
 
கொடுக்கப்படுகிறது.  SRC என்னும் பண்பு, படக் கோப்பின் பெயரை 
 
தடத்துடன்(File Path) குறிப்பிடப் பயன்படுகிறது.


உதாரணமாக,
 
<IMG SRC = "image name with path">
 
என்னும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.



உதாரண நிரல் வரிகளைக் காண்போம்.
 
<IMG SRC = "C:\mypictures\cartoons\mickeymouse.jpg">  என்றவாறு இருக்க வேண்டும்.

ஒரு முழு HTML ஆவணத்தைக் காண்போம்.

<HTML>
<HEAD>
<TITLE>Inserting images in html doucment</TITLE>
</HEAD>
<BODY>
<IMG SRC = "C:\mypictures\cartoons\mickeymouse.jpg"> 
</BODY>
</HTML>

மேற்கண்ட நிரல்வரிகளை நோட்பேடில் எழுதி .html என்ற விரிவுடன் 
 
சேமித்து , அதை உலவியில் திறந்துப் பாருங்கள்..


குறிப்பு: சிவப்பு நிறத்தில் உள்ளதிற்கு பதில் உங்கள் கணினியில் உள்ள 
 
படத்தின் (File Path) தடத்தைக் கொடுக்கவும்

Popular Posts

Facebook

Blog Archive