HTML Tutorials 21-DESCRIPTION TAG - விளக்கக் குறிஒட்டு | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorials 21-DESCRIPTION TAG - விளக்கக் குறிஒட்டு ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 31 டிசம்பர், 2014

HTML Tutorials 21-DESCRIPTION TAG - விளக்கக் குறிஒட்டு

Description tag
comment tag
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 எளிய தமிழில் HTML தொடரில் ஏற்படும் சந்தேகங்களை மின்னஞ்சல் வழி கேட்டுத் தெளிவுறும் நண்பர்களுக்கு எனது நன்றி. இன்றைய பதிவிற்கு வருவோம்..

விளக்கக் குறிஒட்டு(DESCRIPTION TAG)

விளக்க குறி ஒட்டு என்பது மற்ற குறி ஒட்டுகளிலிருந்து சற்றே 
 
வேறுபடுகிறது. இந்த குறி ஒட்டை HTML ஆவணத்தின் தலைப்பகுதி(Header 
 
SECTION), உடல் பகுதி (BODY SECTION) என எந்தப் பகுதியில் 
 
வேண்டுமானாலும் கொடுக்கலாம். இது / என்ற குறியுடன் 
 
முடிவடைவதில்லை.. மாறாக <!-- என்னும் குறியுடன் தொடங்கி --> 
 
என்னும் குறியுடன் முடிகிறது.



இந்த குறியீடு எதற்கென்றால்... நிரல்வரிகள் குறிப்பிட்டுச்சொல்ல.. அதாவது 
 
எதற்காக இந்த நிரல் வரிகள்.. யாரால் எழுதப்பட்டது.. இப்படி தேவையான 
 
விளக்கங்களை அங்கங்கே எழுதி, அதை பிரௌசரில் வெளிப்படாமல் 
 
இருப்பதற்காக இந்த குறிமுறைப் பயன்படுகிறது.


பிளாக்கரின் Edit HTML பகுதிக்குச் சென்று உங்கள் வார்ப்புருவின் 
 
நிரல்வரிகளை கவனித்தால் இதுபோன்ற குறிஒட்டுகள் அங்கங்கே 
 
பயன்படுத்தப்பட்டிருக்கும்.


விளக்கக்குறிப்புகளை இவ்வாறு எழுதலாம்.

<!--Write your Comment Here-->
<!--This is comment-->
<!--This is my own coding-->
<!--Formating text and size-->
<!--Centers everyhthing in the CENTER element-->

ஒரு உதாரண நிரல்வரிகளை கீழேக் காண்போம்.

<HTML>
<HEAD>
<TITLE>MY OWN WEBPAGE
</TITLE>
</HEAD>
<!--CREATED: THE LAST DAY-->
<!--Written by Mr.Arun-->
<!--last modified: today-->
<BODY>
WELCOME TO HTML <BR>
WELCOME TO ALL
</BODY>
</HTML>

மேற்கண்ட நிரல்வரிகளை NOTEPAD-ல் எழுதி .html என்ற விரிவுடன் 
 
சேமித்து வெளிப்பாட்டை உலவியில் திறந்துபாருங்கள்..



<!--விளக்கக் குறிஒட்டில் --> எழுதியவை உலவியில் வெளிப்படாமல் இருக்கும்.



அதாவது இதனுடைய output இவ்வாறு இருக்கும்.


WELCOME TO HTML
WELCOME TO ALL 


அடுத்தப் பாடத்தில் HTML -ல் முக்கியப் பாடமான HTML ஆவணத்தில் 
 
படங்கள், ஒலி, பட்டியல் மற்றும் அட்டவணைகள் ஆகியவற்றை 
 
சேர்ப்பது எப்படி? என்பதைப் பற்றிக் காணவிருக்கிறோம்..

Popular Posts

Facebook

Blog Archive