HTML Tutorials 20-FONT குறிஒட்டும் அதில் பயன்படுத்தும் பண்புகளும் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorials 20-FONT குறிஒட்டும் அதில் பயன்படுத்தும் பண்புகளும் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

HTML Tutorials 20-FONT குறிஒட்டும் அதில் பயன்படுத்தும் பண்புகளும்

எளிய தமிழில் HTML தொடரில் அடுத்து நாம் காணவிருப்பது <FONT>குறி 

 

ஒட்டாகும். இதில் பயன்படுத்தப்படும் பண்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.


FONT என்றால் எழுத்து. எழுத்தில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. 

 

இதற்கு பல்வேறு வகையான நிறங்களையும் கொடுக்கலாம். 


 

 

<FONT> குறிஒட்டில் FACE, SIZE மற்றும் COLOR என்னும் பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் எழுத்தின் வகை, எழுத்தின் அளவு, எழுத்தின் நிறம் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும்.



அதாவது இவ்வாறு இருக்க வேண்டும


<FONT SIZE="Size of the text in pixels" COLOR="Color Name" FACE="font name"> Sample Text</FONT>


SIZE பண்பு


SIZE  பண்பினை <FONT> குறி ஒட்டில் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.

 

<FONT SIZE= "Value"> 1 முதல் 7 வரை எழுத்தின் அளவுகளை இதில் 

 

பயன்படுத்தலாம். Default(கொடாநிலை)ஆக எழுத்தின் அளவு 3 என 

 

இருக்கும். 


உதாரணம்: <FONT SIZE="3">Change the font size to 3</FONT>


COLOR பண்பு


உரை எந்த நிறத்தில் தெரிய வேண்டும் என்பதைக் குறிப்பிட COLOR பண்பு 

 

பயன்படுகிறது. இதில் நிறத்தின் பெயரையோ அல்லது அதற்கான RGB 

 

குறிமுறையையோ கொடுக்கலாம். 



COLOR பண்பினை <FONT> கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். 


<FONT COLOR="#FF000">THIS TEXTX IS RED</FONT>

 

அல்லது இப்படியும் நிறத்தின் பெயரையும் கொடுக்கலாம்.

 

<FONT COLOR="red">THIS TEXT IS RED</FONT> 



FACE பண்பு


உரை எந்த எழுத்து வகையில் காட்டபட வேண்டும் என்பதைக் குறிக்க FACE 

 

பண்பு பயன்படுகிறது. பெரும்பாலும் அனைத்து உலவிகளும், பொதுவாகப் 

 

பயன்படுத்தப்படும் எழுத்து வகைகளை ஏற்றுக் கொள்கின்றன. உலவியால் 

 

காட்ட முடியாத எழுத்து வகைகளை ஏற்றுக் கொள்கின்றன. உலவியால் 

 

காட்ட முடியாத எழுத்து வகையை நாம் கொடுக்கும்போது,  உரையானது 

 

கொடாநிலை(DEFAULT) எழுத்து வகையில் காட்டப்படும். 


FACE பண்பினை <FONT> குறி ஒட்டில் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். 


உ.ம்.


<FONT FACE="Arial">Welcome Friends</FONT>


<FONT > குறிஒட்டில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைப் பயன்படுத்தலாம். 


உதாரணம்: <FONT FACE="Arial" SIZE="5" COLOR="Blue">Happy Birthday</FONT>



இவ்வாறு  <FONT> குறிஒட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளைப் பயன்படுத்தலாம்..


ஒரு உதாரண நிரல்வரிகளைக் காண்போம்..


<HTML>

<HEAD><TITLE>Changing the Font, Size and Color </TITLE>

</HEAD>

<BODY>

<FONT face= "arial" size="3" color="red">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "digital" size="3" color="green">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "forte" size="3" color="blue">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "elephant" size="3" maroon="red">Dear Friends..!"</FONT> <BR>

<FONT face= "alerian" size="3" color="navy">Dear Friends..!"</FONT> <BR>

</BODY>


மேற்கண்ட நிரலை நோட்பேடில் எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து உலவியில் திறந்து பாருங்கள்.


இவ்வாறு இருக்கும்.


Dear Friends..!"

Dear Friends..!"

Dear Friends..!"
Dear Friends..!"
Dear Friends..!"

www.masinfom.blogspot.com

Popular Posts

Facebook

Blog Archive