HTML Tutorials 16-HTML ஆவணத்தில் தமிழை வெளிப்படுத்த | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorials 16-HTML ஆவணத்தில் தமிழை வெளிப்படுத்த ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

HTML Tutorials 16-HTML ஆவணத்தில் தமிழை வெளிப்படுத்த

 
வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கும் நமது 'எளிய தமிழில் HTML 
 
கற்றுக்கொள்ள' தொடரில் HTML தொடர்பான அடிப்படைப் பாடங்களை 
(கற்றுக்கொண்டு)பார்த்துக்கொண்டு வருகிறோம்.

ஒவ்வொரு பாடத்திலும் எளிமையான தமிழ்வார்த்தைகளைப் 
 
பயன்படுத்தியே வருகிறேன்.

ஒரு HTML ஆவணத்தில் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதை HTML 
 
கோப்பாகச் சேமிக்கும்போது ஒரு சிலப் பிரச்னைகள் வரலாம்.
 
 அதாவது தமிழில் எழுதிய உங்களுடைய கோப்புகளை உலவியில் 
திறக்கும்போது எழுத்துகள் சரியாக இல்லாமல் சிறு சிறு கட்டங்களாக தோன்றும். அல்லது புரியாத குறியீடுகளைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.



<HTML>

<HEAD>
<TITLE>
How to display tamil in a HTML Document 
</TITLE>
</HEAD>
<BODY>
நீங்கள் உங்கள் HTML கோப்புகளை ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துகளாக தட்டச்சிட்டு, அதை பின்வருமாறு சேமிக்க வேண்டும்.  
</BODY>
</HTML>


மேற்கண்ட நிரல் வரிகளை NotePad எழுதி சேமிக்கும்போது  எந்த வகைகோப்பாக சேமிக்க வேண்டும் என்ற விருப்பம் அதில் கீழே இருக்கும்.




அதில் UTF-8 என்பதைத் தேர்ந்தெடுத்து சேமித்து விடுங்கள்.

சேமித்த HTML கோப்பை(File) உலவியில்(Internet Browser) திறக்கும்போது வலைப்பக்கமானது தமிழிலேயே காட்டும்.

இனி நீங்கள் தமிழில் எழுதும் ஒவ்வொரு புதிய ஹெச்.டி.எம்.எல். கோப்பையும் இந்த முறையில் சேமியுங்கள். பிறகு வலைஉலவியில் திறந்து பார்க்கும்போது வலைப்பக்கமானது(Web Page) அழகு தமிழிலேயே வெளிப்படும்.

Popular Posts

Facebook

Blog Archive