HTML Tutorials 15-Body tag- ல் TEXT பண்பு.. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorials 15-Body tag- ல் TEXT பண்பு.. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

HTML Tutorials 15-Body tag- ல் TEXT பண்பு..

body attribute text in html

வணக்கம் நண்பர்களே.. கடந்த இடுகையில்<BODY> 

குறிஒட்டின்(TAG)-ல் பயன்படுத்தக்கூடிய பண்புகளில் ஒன்றான 

BGCOLOR என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். படிக்கத் 

தவறியவர்கள்  இந்த இணைப்பை கிளிக் செய்து 

பார்த்துக்கொள்ளுங்கள். 


இன்றையப் பாடத்தில் TEXT பண்பு என்பதைப் பற்றிப் பார்ப்போம். 

நீங்கள் உருவாக்கும் HTML ஆவணத்தில் சாதாரணமாக எழுத்துகள் 

கறுப்பு நிறத்தில் இருக்கும். இதை நாம் மாற்றலாம். அதற்கு இந்த TEXT 

என்ற பண்பு பயன்படுகிறது. 


உம். <BODY BGCOLOR="red" TEXT="White"> என்று கொடுத்துப் 
பாருங்கள். இதன் விளைவு பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் 
நீங்கள் தட்டச்சிடும் உரையானது வெண்மை நிறத்திலும் இருக்கும். 


உ.ம். 

ஒரு HTML ஆவணத்தைப் பார்ப்போம்.

<HTML>

<HEAD>

<TITLE>BGCOLOR AND TEXT COLOR</TITLE>
</HEAD>
<BODY BGCOLOR="red" TEXT="White"> 
இந்த HTML ஆவணம் பிண்ணனி நிறத்தையும்,  அதில் இடம்பெறும் எழுத்துக்களின் நிறத்தையும் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் இடம்பெறும் எழுத்துகள் வெண்மையாகவும் இருக்குமாறு BODY குறி ஒட்டில் சிறப்புப் பண்புகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 
</BODY>
</HTML>

இந்த நிரலை Notepad எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து உங்கள் 

உலவியில் திறந்துபாருங்கள்.


மேற்கண்ட HTML ஆவணத்தில் பின்னணி நிறம் மற்றும் எழுத்தின் 
நிறத்தையும் நிர்ணயிக்கும் சிறப்புப் பண்புகளான BGCOLOR, TEXT என்ற 
இரு பண்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

உலவியில் இதனுடைய வெளிப்பாடு(OUTPUT) இவ்வாறு இருக்கும்.
  

இந்த HTML ஆவணம் பிண்ணனி நிறத்தையும்,  அதில் இடம்பெறும் 

எழுத்துக்களின் நிறத்தையும் குறிக்கும் வகையில் 

அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது பின்னணி நிறம் சிவப்பாகவும், 

அதில் இடம்பெறும் எழுத்துகள் வெண்மையாகவும் இருக்குமாறு BODY 

குறி ஒட்டில் சிறப்புப் பண்புகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 


  இதில் பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் இடம்பெற்றுள்ள 
உரைக்கான எழுத்துகள் அனைத்தும் வெண்மை நிறத்திலும் 
இருப்பதைப் பாருங்கள். இவ்வாறு நமக்கு விருப்பமான வண்ணங்களில் 
எழுத்துகளை TEXT பண்பைப் <BODY> TAG-ல் பயன்படுத்துவதன் 
 மூலம் பெற்றுக்கொள்ளலாம்.



குறிப்பு: இந்த சிறப்புப் பண்புகள் அனைத்தும் Body என்னும் குறிஒட்டில்(Tag) பயன்படுத்தக்கூடியவை என்பதை நினைவில் வைத்திருங்கள். 

Popular Posts

Facebook

Blog Archive