HTML Tutorials 12-CENTER tag | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorials 12-CENTER tag ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

HTML Tutorials 12-CENTER tag

 
எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள தொடர் மூலம் நிறைய புதிய 
 
நண்பர்களைப் பெற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. விடுபட்ட கடந்த 
 
மூன்றுநாட்களுக்கான பதிவுகளையும் சீரான இடைவெளியில் இன்றைய 
 
வேலைநாளில் பதிவிட எண்ணியிருக்கிறேன். பதிவிற்கு வருவோம்.


கடந்த பதிவில் பத்திக் குறி ஒட்டில் (Paragraph Tag) இசைவுப்(Align) பண்புகளைப் (attributes) பற்றிப் பார்த்தோம்.

இப்பதிவில் <CENTER> மற்றும் </CENTER> ஆகிய குறி ஒட்டுகளைக் காண்போம். இந்தக் குறிஒட்டுகளுக்கு(Tags) இடையில் உள்ள உரை உலவித்திரையில் கிடைமட்டமாக(Horizontal) மையப்படுத்திக் காட்டப்பட பயன்படுத்தப்படுகிறது.அதாவது வலைப்பக்கத்தில் மையப்படுத்தி(Center) காண்பிக்கும்.

கீழ்க்கண்ட நிரல்வரிகளை notepade-ல் எழுதி வழக்கம்போலவே .html என்ற விரிவுடன் சேமித்து, உங்கள் கோப்பை Internet Explorer, Google Chrome, Firefox போன்ற உலவிகளில் திறந்துப் பாருங்கள். உரையானது மையப்படுத்திக்  காண்பிக்கப்பட்டிருக்கும்.

<HTML>
<HEAD>
<TITLE>THIS IS MY OWN PAGE</TITLE>
</HEAD>
<BODY>
<CENTER>HI Masinfom BLOG VIEWERS</CENTER>
</BODY>
</HTML>

இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.


 HI Masinfom  BLOG VIEWERS


இவ்வாறு ஒரு உரையை நடுவில், மையப்படுத்தி காண்பிக்க இந்த <center></center>குறிஒட்டுகள் காண்பிக்கப் பயன்படுகிறது.அடுத்த பதிவில் <BR> (Break Tag)ஐப் பற்றிப் பார்ப்போம்

Popular Posts

Facebook

Blog Archive