HTML Tutorial 8-ஒரு HTML கோப்பு | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorial 8-ஒரு HTML கோப்பு ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

HTML Tutorial 8-ஒரு HTML கோப்பு


இப்பதிவில் ஒரு HTML நிரலை எவ்வாறு உருவாக்குவது? அதை எப்படி 
 
சேமிப்பது? சேமித்த கோப்பை எப்படி திறந்து பார்ப்பது? என்பதைப் பற்றிப் 
 
பார்ப்போம். 

ஒரு HTML PROGRAMME எழுதலாம் வாங்க..!!

உங்கள் கணினியில் , 

Start --> Programs-->Notepad என்னும் கட்டளை மூலம் Notepad ஐத் திறக்கவும்.
 
கீழிருக்கும் HTML நிரல் வரிகளை நோட்பேட்டில் உள்ளிடவும்.

<html>
<head>
<title>Welcome to webpage</title>
</head>
<body>
Hi Friends! this is my first webpage
</body>
</html>

அனைத்தையும் தவறில்லாமல் தட்டச்சு செய்த பிறகு Menu bar-ல் File 
 
என்பதை கிளிக் செய்யவும்.

கீழிவிரியும் மெனுவில் Save என்பதை கிளிக் செய்தால் Save As என்ற 
 
உரையாடல் பெட்டித் தோன்றும்.

அதில் தங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சிட்டு .html என்னும் 
 
விரிவுடன் சேமிக்கவும்.

நான் mypage.html எனப் பெயரிட்டு .html விரிவுடன் சேமித்திருக்கிறேன்.இங்கு 
 
.html என்பதுதான் இது HTML கோப்பு என்பதை நிர்ணயிக்கிறது. இது மிகவும் 
 
முக்கியமான ஒன்றாகும். 

 சேமித்த HTML கோப்பை  திறப்பது எப்படி ?

உங்கள் இன்டர்நெட் உலவியைத் திறக்கவும். 
  • அதில் File ==> Open என்பதை கிளிக் செய்யவும்.
  • உரையாடல் பெட்டி ஒன்று திரையில் தோன்றும். 
  • அதில் Open என்ற பெட்டியில் நீங்கள் சேமித்த கோப்பின் பெயரைக் கொடுத்து Browse என்பதைச் சொடுக்குங்கள். 

அதில் நீங்கள் உள்ளிட்ட பெயருடன் கூடிய html கோப்பு இன்டர்நெட் 
 
எக்ஸ்புளோரர்  அல்லது Firefox, Google chrome (நீங்கள் எந்த உலவியைப் 
 
பயன்படுத்துகிறீர்களோ) அந்த ஐகானுடன் இருக்கும்.

அக்கோப்பைத் தேர்வு செய்து Open என்பதை கிளிக் செய்யவும். இப்போது  
 
Internet உலவியில் உங்கள் வலைப்பக்கமானது திறந்திருக்கும்.

இதில் நீங்கள் எழுதிய HTML குறிஒட்டுகள் தெரியாது. குறிஒட்டுக்குள் என்ன 
 
எழுதினீர்களோ அதுமட்டுமே வலைதளத்தில் தெரியும்.

நான் எழுதி <title></title> குறிஒட்டிற்குள் எழுதிய Welcome to webpage என்பது தலைப்பு பகுதியிலும், <body></body> என்னும் குறிஒட்டிற்குள் எழுதிய வாக்கியம் வலைப்பக்கத்திலும் தெரிவதைக் கவனியுங்கள்..

இவ்வாறு ஒரு முழு HTML நிரல் வரிகளை எழுதி மேற்குறிப்பிட்ட வகையில் 
 
.html என்னும் விரிவுடன் சேமித்து, அதை வலைஉலவியில் திறந்து 
 
சோதனை செய்துகொள்ளலாம்.


தொடர்ச்சியாக ஒரு HTML ஆவணம் தயாரிக்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை:


1. HTML ஆவணம் <HTML> மற்றும் </HTML> என்னும் குறி ஒட்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.

2. <TITLE> மற்றும் </TITLE> என்னும் குறி ஒட்டுகள் <HEAD> மற்றும் </HEAD> என்னும் குறிஒட்டுக்குள் இடையில் இருக்க வேண்டும்.

3. <BODY> மற்றும் </BODY> என்னும் குறி ஒட்டுகள் </HEAD> என்னும் குறிஒட்டிற்குப் பின்னர்தான் எழுதப்பட வேண்டும்.

4. மற்ற அனைத்து குறிஒட்டுகளும் <BODY> மற்றும் </BODY> என்னும் குறிஒட்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்.

5. அனைத்து HTML ஆவணங்களும் ".htm" அல்லது ".html" என்னும் விரிவுடன்(Extension) இருக்க வேண்டும். 

6. <> என்ற குறியீடுகளுக்கு இடையில் தொடக்க குறிஒட்டு(Tag) ஆகும்.

7. </ > என்ற குறியீடுகளுக்கு இடையில் முடிவுக் குறிஒட்டு(Tag) ஆகும்.

Popular Posts

Facebook

Blog Archive