HTML Tutorial 5-HTML உறுப்புகள்(Elements) | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorial 5-HTML உறுப்புகள்(Elements) ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 15 டிசம்பர், 2014

HTML Tutorial 5-HTML உறுப்புகள்(Elements)

HTML Tutorial 5

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இப்பதிவில் நாம்  பார்க்க இருப்பது உறுப்பு என்று சொல்லப்படுகிற Element என்பதைப் பற்றி..

ஒரு உறுப்பு என்பது தொடக்க குறிஒட்டு,  மற்றும் இறுதி குறிஒட்டு , (Starting Tag, End Tag) இரண்டும் சேர்ந்ததுதான் உறுப்பு என்று சொல்லப்படுகிறது.

< > - இது ஒரு டேக்(குறிஒட்டு) - இதற்கு ஆரம்ப குறிஒட்டு (Starting Tag) என்று பெயர்.
</>- இது ஒரு டேக்(குறிஒட்டு)- இதற்கு முடிவு குறிஒட்டு (End Tag) என்று பெயர்.

இதை இரண்டையும் ஒரு சேர எழுதி, இடையில் என்ன பொருள் இருக்க வேண்டுமோ அதை எழுதினால் இதற்கு பெயர் உறுப்பு.

<>பொருள்</>  - இதற்கு பெயர் உறுப்பு (Elements).

ஒரு முழு  HTML உறுப்பானது இவ்வாறு அமையும்.
<b>வணக்கம்</b>

இப்போது உறுப்பு(Elements) என்றால் என்ன என்பதை நாம் நன்றாக தெரிந்துவிட்டோம். அதாவது ஒரு ஆரம்ப குறிஒட்டிற்கும் , முடிவு குறிஒட்டிற்கும் இடையில் ஏதாவது ஒன்றை (பொருள்) எழுதி முடித்திருந்தால் அதுதான் உறுப்பு என்பது. மேலும் ஒரு உதாரணம்

<I>வணக்கம்</I>
இதுவும் ஒரு உறுப்பு(Elements) என அழைக்கலாம்.
                          நன்றி நண்பர்களே..!!
Arunprasath....

Popular Posts

Facebook

Blog Archive