HTML Tutorial -10-பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag) | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil HTML Tutorial -10-பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag) ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

HTML Tutorial -10-பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag)

 
கடந்த பதிவில் முழுமுதன்மையான குறிஒட்டுக்களான <b></b>, <i></i> 
மற்றும் <u></u> என்பதைப் HTML Tags-(Part-I) பார்த்தோம்.
இந்தப் பதிவில் பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag) என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


பத்திக் குறி ஒட்டில் தொடக்கம் <P> இவ்வாறு இருக்கும். இது ஒரு புதிய பத்தி தொடங்குவதைக் குறிக்கிறது.

</p> என்னும் முடிவுக் குறி ஒட்டு பத்தி முடிவதைக் குறிக்கிறது.

இந்தக் குறி ஒட்டு எதற்கென்றால் ஒவ்வொரு பத்தியாக(Paragraph) பிரித்துக்காட்டப் பயன்படுகிறது. இதில் ஆரம்ப குறிஒட்டு ஒன்றை சேர்த்தால் கூட போதுமானது.


உதாரணத்தைக் கவனியுங்கள்..

<HTML>
<BODY>
<P>இந்த எளிய தமிழில் HTML தொடர் எளிமையாகவும், புதிய
வாசகர்களுக்கும், HTML கற்க விருப்பமுள்ளவர்களுக்கும்
பயனுள்ளதாக உள்ளது. </p><p>இந்த தளத்தைப் பற்றி உங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். </P>
<P>தொடர்ந்து உங்களின் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும்
வழங்க கேட்டுக்கொள்கிறேன். <p> நன்றி. வணக்கம். 
<BODY>
</HTML>

 இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும். 


எனவே ஒரு பத்திக்கும்(Paragraph) அடுத்த பத்திக்கும்(Paragraph) 
 
இடைவெளி காண்பிக்க இந்த Pragraph Tag பயன்படுகிறது என்பதை 
 
அறிந்துகொள்ளுங்கள். இதைச் செயல்படுத்தி பார்க்க நோட்பேடில்

மேற்கொண்ட நிரல்வரிகளை எழுதி Body Section -ல் ஒன்றிரண்டு பத்திகளை 
 
எழுதி அவற்றிற்கிடையில் Pragraph Tag-ஐப் பயன்படுத்திப் பாருங்கள்.

அதன் விளைவை உலவியில் திறந்து பார்த்தால் தெரியும். Pragraph Tag 
 
இடாத பத்திகள் அனைத்தும் இடைவெளியில்லாமலும் , Pragraph Tagஇட்ட 
 
பத்திகள் இடைவெளிவிட்டு அமைந்திருப்பதையும் காணலாம்.

Popular Posts

Facebook

Blog Archive