Java-ஜாவா 5ம் பாடம். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Java-ஜாவா 5ம் பாடம். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 27 மே, 2014

Java-ஜாவா 5ம் பாடம்.

 

முந்தைய பாடத்தில் பார்த்த நிரலை சற்று மாற்றிப் பார்ப்போம்.

Public Class Welcome2
{
//main method
Public static void main(String[] args)
{
System.out.println(“Hello\n,world”);
}
}
வழக்கம் போல println  வழிமுறையானது(method) output செய்ய பயன்படுத்தப் பட்டுள்ளது,
 
இந்த நிரலின் வெளியீடானது பின் வருமாறு இருக்கும்.
Hello
World
 
ஏன் multiple lines?
காரணம் நாம் உபயொகப்படுத்திய்ள்ள ‘\n’ ஆகும்.println வரியில் hello வுக்கும் world க்கும் ந்டுவில் ‘\n’ இருப்பதைக் கவனியுங்கள்.’\n’ என்பது escape sequencelல் ஒன்றாகும்.இது new line character என்று அழைக்கப்படுகின்றது..
 
Printf மூலம் வெளியீடு செய்தல்.
 
Public Class Welcome3
{
//main method
Public static void main(String[] args)
{
System.out.printf(“%s\n%s”,”welcome to”,”java language”);
}
}
 
System.out.printf என்பது formatted output செய்யப் பயன்படுகின்றது.
System.out.printf(“%s\n%s”,”welcome to”,”java language”);
 
%s என்பது stringகிற்கான format specifier ஆகும்.
Format specifier  என்பது  % குறியீட்டுடன் ஆரம்பிக்கின்றன.s என்பது string ஐ குறிக்கின்றது. %d என்றால் integer மற்றும் %f என்றால் float ஆகும்.
மேலே உள்ள நிரல் வரியில் முதலில் உள்ள %s ஆனது “welcome to”வால் replace செய்யப்படுகின்றது. இரண்டாவதாக வரும் %s ஆனது “java language”என்பதால் replace செய்யப்படுகின்றது.
 
இதன் வெளியீடானது
Welcome to
Java language
என இருக்கும்.
Multiple lines வெளியீட்டிற்கு காரணம் “\n” printf statementல் உபயோகிக்கிப்பட்டிருப்பது தான்.

Popular Posts

Facebook

Blog Archive