Java-ஜாவா 4ம் பாடம். | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Java-ஜாவா 4ம் பாடம். ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 27 மே, 2014

Java-ஜாவா 4ம் பாடம்.

ஜாவா நிரல் அறிமுகம்.
 
//Welcome.java
Public Class Welcome
{
//main method
Public static void main(String[] args)
{
System.out.println(“Hello,world”);
}
}
மேலே உள்ள நிரலில் Welcome என்ற class க்குள் main method உள்ளது.
ஒவ்வொரு நிரலிலும் ஒரு class கட்டாயம் இருக்கும்.
இங்கே class  பெயரானது Welcome என இருக்கின்றது.
 
convention படி classன் பெயரின் ஒவ்வொரு வார்த்தையும் capital letter  லில் ஆரம்பிக்கிறது. (ex :HelloWorld).
பொதுவாக ஜாவாவில் classன் பெயரானது identifier எனப்படுகின்றது.
Identifier ல் கேரக்டர்,எண்கள்,அன்டர்ஸ்கோர், $ குறீயீடு வ்ரலாம். எனினும் எண்களுடன் ஆரம்பிக்கக்கூடாது.
பெயரில் இடைவெளி வரக்கூடாது.
Input1—valid
1input—invalid.
 
ஜாவாவானது case sensitive மொழியாகும்.
// main method வரி
// ன் தொடங்குவது இது comment line என்பதைக்குறிக்கின்றது.
Comment line ஆனது இயக்கப்படாது.
 
இது நிரலாலரின் நிரலை பற்றிய குறிப்பாகும்.
// என தொடங்குவது ஒற்றை வரி குறிப்பாகும்
 
உதாரணம்:
// single line
பல் வரி குறிப்பானது/
/* என தொடங்கி */ என முடிகின்றது.
/* this is a
Multi line
Comment */
Public static void main(String{} args) வரி
இது தான் ஒவ்வொரு ஜாவா நிரலின் முதலில் இயக்கப்படும் வரியாகும்.
ஒவ்வொரு ஜாவா நிரலிலும் ஒரு main method கட்டாயம் வேண்டும்.
இல்லையென்றால் jvm  ஆனது ஜாவா நிரலை இயக்காது.
 
{ மற்றும் } main method ன் எல்லையைக் குறிக்கின்றது.
 
Void keyword ஆனது main method எதையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்கின்றது.
 
 System.out.println(“Hello,world”);  வரியானது
Hello World  என பிரிண்ட் செய்யும்.
System.out என்பது standard output object ஆகும்.
 
இது command window ல் string ஐ வெளியீடு செய்யப் பயன்படுகின்றது.
 
--தொடரும்.

Popular Posts

Facebook

Blog Archive