Java-ஜாவா 10 ம் பாடம்.(Selection statements.) | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Java-ஜாவா 10 ம் பாடம்.(Selection statements.) ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 28 மே, 2014

Java-ஜாவா 10 ம் பாடம்.(Selection statements.)

ஜாவா 10 ம் பாடம்.

Selection statements.


ஜாவாவானது இரண்டு வகையான selection statements யை ஆதரிக்கின்றது.
அவையாவானது
1.       If
2.       Switch
 
If:
If ஆனது ஒரு பூலியன் expression ன் அடிப்படையில் இயங்குகிறது.
பூலியன் expression  மதிப்பு true எனில் ஒரு set of statementsம் ,false எனில் இன்னொரு set of statements ம் இயக்கப்படும்.
 
உதாரணம்:
Int a,b;
--
--
If(a>b)
return a;
Else
return b;
இப்படியல்லாது பூலியன் மாறியின்(variable) அடிப்படையிலும் இயக்கலாம் .
அதாவது மாறியின் மதிப்பு true எனில் ஒரு statements  தொகுப்பும், false  எனில் மற்றொரு statements தொகுப்பும் இயக்கப்படும்.
 
If(available)
System.out.println(“call me”);
else
System.out.println(“don’t call me”);


ஒரு conditionன் கீழ் இயங்கும் statements ஒன்றுக்கு மேல்பட்டது எனில் அவை { மற்றும் } க்குள் கொடுக்கப்பட வேண்டும்.
 
உதாரணம்:
If(marks>=40)
{
System.out.println(“good”)
 System.out.println(“passed”);
}
else
{
System.out.println(“bad”);
System.out.println(“failed”);
}
 
Example flow chart:
undefined

மேலே உள்ள flowchart ல் ஸ்கோர் 60ற்கு மேல் எனில் ஒரு ஸ்டேட்மெண்டும் 60ற்கு கீழ் எனில் இன்னொரு ஸ்டேட்மெண்டும் இயக்கப்படும்.
 
-----தொடரும்

Popular Posts

Facebook

Blog Archive